கடிகார சப்தத்தின் மொழியிலிருந்து
இருளை மெல்ல மெல்ல திரட்டுகிறேன். விடிபல்பின் இள நீலத்தில் தாத்தாவின் முகத்தில் வால் நெளிக்கிறது பல்லி.
கழிவறைக்குழாய் அதனை நீர்மையாய் உருமாற்றிக் கனமெழுப்பி புரண்டு படுக்கிறது. இந்தத் திட்டுகள் படிந்த இரவு சமனில்லாத வறண்ட குளம் போல,
எதன் பொருட்டோ கனவு எழுப்புகிறது.
இதன் எண்ணற்ற டயர்த் தடங்கள்,
இரவின் கீழ்க்கழுத்தில் உன்னிகளாய் முளைக்கத் தொடங்கியதும்,
அமைதியற்றது மெல்ல மெல்ல திட ரூபம் கொள்கிறது.
பின் இந்த இரவினைத் திருப்தியாகக் கடத்தி விடுகிறேன்.
வயிறு முட்ட முட்டத் தண்ணீர் குடிப்பதைப் போல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக