நாள்பட்ட உணவுப்பண்டத்தில்
பூஞ்சை பூத்தது
போல,
நாள்பட்ட அவமானங்களும்
ஆகி விடுகின்றன.
மழை நாளின் இரவுகளில்,
உதிறாத சொற்களின்
கூர் நுனிகளைக் கொண்டு
கதகதப் பூட்டுகிறேன்.
சில நேரங்களில்
அதன் வன்மம்
ஒரு சிறுபிள்ளையாய்
சொற்களின் வெவ்வேறு
அர்த்த பாவங்களை
திருவிழா பொம்மைகளைப்
போல உடைத்து
விகார உருவம் உருவாக்குகின்றன.
கை கால் தலைகள்
சிதைந்த அவைகளைப்
பரண் மேல்
பத்திரமாக ஒத்துக்கி
வைக்கிறேன்.
இருளிலிருந்து
ஒளி ஊடுருவும்
இடைவெளிகளில்
தென்னிப்பார்க்கும்
அந்த உருவங்கள்,
செத்திக்கப்பலுக்குள்
அரைபடும்
பென்சில் முனைகள்
போல,
மீண்டும் மீண்டும்
உடைபட்டு உருளுகின்றன.
சொற்கள் தீர்மானிப்பது
அவனைக்கொண்டா?
அவமானங்கள் சொற்களால்
மட்டும்
ஆனவையும் அல்லதானே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக