ஒளி தன் சின்னஞ்சிறிய கிண்ணங்களில் சேமித்து வைக்கிறது மீதமிருந்த இருள் துணுக்குகளை.
வெண்நிறக் குமிழ்களின் வழி வெளித் தெரிகிறது உன் கோபுர நுனிகள்.
வெகு தொலைவில் சிறகடிக்கிறது.
மெல்ல சாயம் ஏறுகிறது.
விளிம்புகள் மூடத் தொடங்கியதும் உன்னுடனான பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டேன்.
பின்னான காத்திருப்பில் அமைதியுடன் வந்திறங்கிய இரு சிறகுகளை, யாரும் அறியும் முன் என் தோணிக்குள் மறைத்து வைக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக