திங்கள், 29 ஜனவரி, 2018

முறிந்த சிறகுகள்

அந்தர நதியின் சிறகுகளை அறிவாயா,
தன் முட்டைகள் கனக்க கூடு தூக்கி வந்ததே உன்னிடம்,
உன் ஓடத்தின் துடுப்புகளால் உடைந்து போனதே,
உன் பாதையின் கட்டக் கடைசியில்
அதற்கு ஒரு வீடு உண்டு.
உனக்கு தெரியுமா,
அதன் இணை அங்கு ராவினை ஒளியேற்றி அழைக்கிறது,
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை,
உன் பயணத்தின் தனிமைச் சுழியில்
உன்னுடன் காத்திருக்க வந்ததே,
அது இந்த மேல் நோக்கி பாயும் நதியின் உடல். எங்கனம் உனக்கு சொல்வேன்,
இணைச் சிறகின் கனவுகளைத் தான்
நீ முறித்து விட்டாயே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக