ஞாயிறு, 21 ஜனவரி, 2018

ஜன்னல் அளவு

இந்த நிலம் என் ஜன்னல் அளவுக்கே வளர்ந்திருக்கிறது.
நான் அதனைக் கடந்து செல்லும் போது மழைப்பூச்சி நெடி.
பாறைகளில் எழுதிய பெய்ண்ட் தழும்புகள் போல
எல்லாருக்குமாய் தத்தமது சொற்களை பாய் விரிக்கிறது.
இங்கு கதவுகளைத் திறந்து கொண்டு அழைக்கும் ராத்திரி மழையை நான் கண்டு கொள்ளவில்லை.
அப்படியானால் என் ஜன்னலை வடிவமைத்த பொழுதும்,
அதற்கு முன்பும் பின்பும் அந்த நிலம் இருந்திருக்கும்.
அதன் சொற்களும்.
இல்லை எல்லோரது சொற்களும்.
ஆனால் நான் ஜன்னல் அளவுக்கே அதை வைத்துக் கொள்வேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக