முத்தத்தின் நிறங்களை வகைப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.
மிக நீண்ட கடற்கரையில் தொட்டு மீளும்
ரகசியப் பாய்ச்சல்களில்
அலை அவிழ்த்து விட்டுச் சென்ற ஈரம்.
நிர்வாணப் புதையலாய்
காற்றின் விளிம்புகளிலிருந்து
ஒன்று ஒன்றாக பாலித்தீன் பைகள்
தன் ஒவ்வோர் மீறலுக்கும்
கரையினை எடுத்துச் செல்கிறது.
நேற்றைய இரவின் மிக நீண்ட முத்தம்
ஒரு சப்தக் கோர்வையாய்
காது மடல்களுக்குள் சேகரமாகும் பொழுது
சிவந்து கொழுத்த தீ நிறம்.
அந்தியின் கழுத்தைக் கவ்வ விளையும்
ராத்திரியின் பிரம்மாண்ட மூடுதிரையில்
துளையிட்டு உற்று நோக்குகிறது
வெண் நிறம்.
நீ மறைத்து வைத்து கன்னம் கவ்வியப் பற்தடம்,
மூங்கில் பச்சை.
கால் நகங்களில் படிந்திருக்கும் மண் பழுப்பு.
அந்தரங்கங்களில் மேவுகிறது உவர்த்த கார் நிறம்.
மூச்சு கிழிந்த தீ முட்கள்,
வானிலிருந்து ஒடிந்து வீழ்கின்றன
நிறக் குமிழிகள்.
திட்டுத் திட்டாய் நிரம்புகிறது
இந்த மிக நீண்ட கடலின் ஒதுக்குப்புறத்தில்
புழை போல மெல்ல மெல்ல நுழைகிறது.
பிதுக்கியெறியப்பட்ட
நுரைகளிலிருந்து பிரிந்தோடுகின்றன எண்ணிலடங்கா நரம்புகள்
தனித்தனியே.
உன் முத்தம்
வண்ணங்களின் சுழல்களிலிருந்து
முளைத்துக் கொண்டே இருக்கின்றன.
பின் நுழைந்து கொண்டே இருக்கின்றன.
மிக நீண்ட கடற்கரையில் தொட்டு மீளும்
ரகசியப் பாய்ச்சல்களில்
அலை அவிழ்த்து விட்டுச் சென்ற ஈரம்.
நிர்வாணப் புதையலாய்
காற்றின் விளிம்புகளிலிருந்து
ஒன்று ஒன்றாக பாலித்தீன் பைகள்
தன் ஒவ்வோர் மீறலுக்கும்
கரையினை எடுத்துச் செல்கிறது.
நேற்றைய இரவின் மிக நீண்ட முத்தம்
ஒரு சப்தக் கோர்வையாய்
காது மடல்களுக்குள் சேகரமாகும் பொழுது
சிவந்து கொழுத்த தீ நிறம்.
அந்தியின் கழுத்தைக் கவ்வ விளையும்
ராத்திரியின் பிரம்மாண்ட மூடுதிரையில்
துளையிட்டு உற்று நோக்குகிறது
வெண் நிறம்.
நீ மறைத்து வைத்து கன்னம் கவ்வியப் பற்தடம்,
மூங்கில் பச்சை.
கால் நகங்களில் படிந்திருக்கும் மண் பழுப்பு.
அந்தரங்கங்களில் மேவுகிறது உவர்த்த கார் நிறம்.
மூச்சு கிழிந்த தீ முட்கள்,
வானிலிருந்து ஒடிந்து வீழ்கின்றன
நிறக் குமிழிகள்.
திட்டுத் திட்டாய் நிரம்புகிறது
இந்த மிக நீண்ட கடலின் ஒதுக்குப்புறத்தில்
புழை போல மெல்ல மெல்ல நுழைகிறது.
பிதுக்கியெறியப்பட்ட
நுரைகளிலிருந்து பிரிந்தோடுகின்றன எண்ணிலடங்கா நரம்புகள்
தனித்தனியே.
உன் முத்தம்
வண்ணங்களின் சுழல்களிலிருந்து
முளைத்துக் கொண்டே இருக்கின்றன.
பின் நுழைந்து கொண்டே இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக