சனி, 3 மார்ச், 2018

உன் தூய்மை

முற்றிலும் மூடிய அறையினுள்
பெரும் பெரும் பாறைகளை
மலைக் கூட்டங்களை பதுக்கி வைக்கிறேன்.
இடைவெளிக் குழிகளில்
நிரம்பத் தொடங்குகிறது பேய் மழைக் குமிழ்கள்.
அது வரை பொறுத்திருந்த
மௌனக் கரைகள் உடைந்தன.
நாள்தோறும் க்‌ஷணந் தோறுமாய்
உன் உள்ளறைகளின் பள்ளத்தாக்குகளில்
இடைவிடாது
அழுந்தி வீழ்கிறேன்.
இந்தப் பேரருவி
சொற்கள் இழந்த
ஒரு மொட்டைப் பாறையாய் அன்றும் இருந்தது.
உன் தூயத் தீ படர்ந்த
வான்வெளியில்
பசும்மேகங்களாய் காட்டிக் கொண்டிருந்தது, அன்று நீ எனக்கே எனக்காய் உடுத்தியிருந்த
இல்லை மறைக்கத் தவறிய
உன் இடையாடையை.
உருவி எடுக்க எடுக்க
என் அறையெல்லாம் பொங்கிப் பெருக்கெடுக்கிறது
உன் தூய்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக