சனி, 3 மார்ச், 2018

நெடும் பயணம்

கருப்பு கனாக்கள் போர்த்திய சாலைகளுக்கடியில்
அடைகாக்கப்படுகின்றன
நெடும் பயணத்தின் முட்டைகள்.
ஓடு பிரியா வண்ணம்
அவைகள் காலா காலாத்துக்கும் குளிர்பதனம் செய்து கொள்கின்றன.
செல்லரிக்காத பாதத் தூளிகளின்
வரைபடத்தில் நிரம்பி வழியும்
நாளையை
ஒற்றி ஒற்றி எடுக்கிறேன்.
தலைச்சுமையாய் கொண்டு வந்த தீவனங்களை வழி தோறும் கொட்டிக் கொட்டி
அவைகளையும்  உடன் அழைத்து வருகிறேன்.
இந்தப் புது பயணத்தில் என் குஞ்சுகளை மெல்ல மெல்லக் குத்தி கருவாய் விழுங்கிப் பசி அடக்குகிறேன்.
ஏன் கனாக்கள் இத்தனை வன்மத்துடன் என்னருகே கமழ்கின்றன.
ஏன் இந்தப் பயணம் முடிவடையப் போவதில்லை எனத் தெரிந்தும்
தினமும் உன்னுடன் ஊடாடுகிறேன்.
நெடும் பயணங்களில் தனிமை இல்லைதான்.
ஆனால் தனித்தே வருகிறேன்.
யாருமில்லா குளக்கரையில் அமர்ந்து
சுய மைதுனம் செய்து கொள்வது போல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக