இரவிற்கு குரல் உண்டா. நிறம் உண்டா. யாருமில்லாத குளத்து படித்துறையில் என் அமைதியற்ற நாட்களின் இருள் இரவுகளை முழுதுமாய் கழித்திருக்கிேறன். அப்பொழுது குளம் நடு நடுங்கிக் கொண்டே இருப்பதைப் பார்ப்பேன். அக்கரை உள்ளீடற்றதாய்ஆகியிருக்கும். நீரின் குரல் ஒரு குழந்தையின் மழலை போல அந்தியில் இருக்கும். இருளில் முழுக முழுக அது வயசாளியின் குரலாய் ஆகியிருக்கும். அதுவரை அது சேமித்து வைத்திருந்த குளிரை ஒரு மிகக் குறுகிய வாய் வழியே தெளிப்பது போல உணர்வேன். அது இருளை இன்னும் அணுக்கமாக அறிவது. என் கனவுகளில் நீரலைகள் கொந்தளித்துக் கொண்டிருக்கும. அதில் உடல்கள். அவளின் உடல்கள். அப்பொழுது குளம் கடலாய் உருமாறத் தொடங்கும். நள்ளிரவின் கடல் ஒரு அலகு நீண்ட பறவையை போல இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக