வியாழன், 11 ஜனவரி, 2018

7 நிமிடங்களே

அடர்மழையில்
கண் திறக்கா நாய்க் குஞ்சுகளைப் போலக் குமைகிறது
நெடுஞ்சாலைக்கிடையில் நடுங்கும்
செடிக்கன்றுகள்.
பாதைகள் கானல் நீரினால் தெளிக்கும்
திரவ நெளிவில்
ஊர்ஜிதமில்லாது கடக்கும்
தற்காலிகக் கூண்டுகள்.
தேவைக்கப்பால் உருக்கொள்ளாத
பாதரச மரங்களின் வெக்கை வீச்சம்
தொலைந்து விடும் தூரம் வரை
சாலைகளின் மினுக்கம்.
கம்பளிப்பூச்சி ஊறல்.
கூகிளின் குரல்
D51 இல் U வளைவினை
அம்புக் குறியிடுகிறது.
என் ஜன்னல் கண்ணாடிக்கப்பால் இருக்கும்
நிலத்தை
ஒரு கலைடாஸ்கோப் வழியே
உருக்குலைத்து அடுக்குகிறேன்.
இன்னும் 7 நிமிடங்கள்.
அதற்குள் பாதையை
ஒரு சவுட்டு மெத்தையாய் மாற்ற முடிந்தால்
உதறிச்சுருட்டி அடிமண்டிக் கிடக்கும்
தடத்தின் வழி பயணப்படுவேன்.
ஆனால் 7 நிமிடங்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக