வியாழன், 11 ஜனவரி, 2018

அவளின் குகை ஓவியங்கள்

காலில்லாத தவளைக்கு றெக்கை முளைத்தாள்
பல்லிக்கு டயர் கால்கள்
ஸ்பைடர் மேன் தலை திருகப்பட்டிருந்தான்
சிங்கி அடிக்கும் குரங்குக்கு
லிப்ஸ்டிக் வரைந்தாள்.
டோராவின் பைகளுக்குள்
கூகுள் மேப்பைச் செருக வேண்டுமாம்.
சோட்டா பீமின் ஒத்தைக்கை
பார்பி கேர்ளுக்கு தாரை வார்க்கப்பட்டது.
ஸ்கூபிக்கு ஸ்வட்டர்.
முற்றத்தில் தென்னை பொரிவானம்
ஆட்டுப்புழுக்கை களச்சிகள்
திருப்பத்து முடி மாமா
எய்த்த வீடு மூக்கக்கா
கீழ்வீட்டு கம்பித்தாத்தா
வாசலில் ஆனைக் கொம்பன்
ரப்பர் அழிப்பான்களால்
அழித்து அழித்து
சுழித்து சுழித்து
உருவாக்கிய அந்த உலகத்தில்
மனிதர்களுக்கு முட்டை வடிவமும்
மற்றவைகளுக்கு முக்கோண வடிவமும் கொடுத்தாள்.
மந்திரக்கோல் தூரிகையால்
வடிவங்களின் விளிம்புகள் வழியே
உலகையும்
ஒரு களச்சி உருண்டையாய்
உருமாற்றியிருந்தாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக