வியாழன், 11 ஜனவரி, 2018

தனித்து விடப்பட்ட பொழுது

என்னறையில் தனிமை
மேஜை விளிம்புகளாய் இருக்கிறது.
சாலை கடக்கும் போது
இடுப்பில் தூக்கிக் கொள்ள
விரல் நீட்டிக் கேட்கிறது.
மாலையில் சாவகாசமாய் தேனீர் அருந்தும் பொழுது,
தெரு நாய்க் கண்களுடன் குந்தி விளிக்கிறது.
கழிவறைக் குழாய்ச் சல்லடைக் குழிகள் வழி,
என் ஆசனவாய் நனைத்துச் சொட்டுகிறது.
சுயமைதுனத்தில்
அது என் கை விரல் நுனிகளில் பிதுங்குகிறது.
இன்று அதனுடன் பேசலாமே
என்று அருகிருந்தேன்,
எதிர்பார்த்தது போல அதுவும்
என்னருகிலிருந்து
மலங்க மலங்க விழித்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக