வெள்ளி, 19 ஜனவரி, 2018

ராவு

நட்சத்திரங்கள் ஒளிந்திருக்கும் குகை விளிம்பு
கித்தான்களின் கிழிசல்கள் வழி
எட்டிப் பார்க்கும் இராக்கூவல்
இன்னும் சஞ்சரிக்கா பகல்களின்
கணப்படுப்பின் கரித்துண்டங்கள்,
முக்கு மூலைகளில் தடாகத் தழும்பலுடன் பரிதவிக்கும் வெண்மையின்
கலங்கல் பரிசுத்தம்,
பிரம்மாண்ட விழுதுகள் கொண்ட ராட்சச மரத்தில் தொக்கி நிற்கும் கூடுகளாய் ராத்திரிக் கோளங்கள். விழுங்க இயலாத கருமை, தெங்கைப் போல
நீர்மையின் குலுங்கலுடன் என் உள்ளங்கைகளில் உருள உருள
எதிரொலிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக