வியாழன், 11 ஜனவரி, 2018

மிகப்பத்திரமாக

மரணித்தவர்கள் என்று யாருமே
இல்லை தானே.
ஞாபகங்களின் தீராத பக்கங்களைத்
திரும்பத் திரும்ப
புரட்டிக் கொவுந்த முனைகள்.
நல்லதும் அல்லதும்
புரண்டுருண்டு
மென்மையும் திடமுமான கூழாங்கற்கள்.
சரிவான நிலத்தில் நடக்கையில்
நகக்கண்களில் குத்த நிற்கும்
கரும்பாறை நுனிகள்.
தெளிவற்ற அந்தி.
மலைகளுக்குப் பின்னால்
இரவின் தண்மையில்
ஒருக்கழித்துக் கிடக்கும் பகல்.
பகலின் கதகதப்பில்
புரண்டு படுக்கும் இரவு.
மரணித்தவர்கள் என்று யாருமே இல்லை,
ஆனால் மரணம்.
ஞாபகங்களின் எழுதாத பக்கங்களில்
மயிலிறகு குட்டி போடுவதைப் போல
மிகப்பத்திரமாக
பாதுகாக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக