புதன், 24 ஜனவரி, 2018

மொழி

மௌனம் வெட்டிக் கிழித்த தோல்,
மொழியற்ற ஊமைத் தழும்பு.
மொழியின் காயம்,
வடிவம் துடிக்கும் குருதி.
அரை நிர்வாணப் பைத்தியத்தின் கைகளில்
கசங்கும்
பிளாஸ்டிக் குவளையில்
வழியும்
ஆறிய தேநீர் போலத்தானே
என் மொழியும் என் உலகினை வடிவமைக்கிறது. நடு ரோட்டில் அவன் சுயஇன்பம் செய்து அயர்வது போலவே
அதனை மறுதலிக்கவும் செய்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக