வியாழன், 11 ஜனவரி, 2018

மழைக் குமிழ்

ஒவ்வொரு
இலைத்துளிகளாக
மழை பொழியும்
மரவானத்தின்
கிளை மேகங்கள்.
இலை நீரில் பொதியும்
மஞ்சள் வெள்ளம்,
ஒரு சிற்றோடையாகிறது,
காற்றின் விரல்களால், அலை ததும்புகிறது.
சூழ்ந்த பசுமையின்
சதுப்புக் கலவையில்
ஒரு தவளையாக அழைப்பேற்று
வந்தமர்கிறேன்.
ஒரு பெரிய இலைத்துளியின் மேல்
சிறிய குமிழ்த்துளியாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக