புதன், 17 ஜனவரி, 2018

ஏன்

ஒரு நிச்சயத்தன்மையைக் குலைத்துக் கொண்டே இருப்பது
காலடிகளின் நடுக்கத்தை பதற்றத்துடன் பின் தொடர்வது
மலைகளுக்கப்பால் இருப்பதை மட்டும் கண்டடையத் துடிப்பது
தன் சொந்த உள்ளங்கைகளால் வேர்களை வேரோடு பிடுங்கி எறிவது
தனக்கான இருக்கையில் மலம் அள்ளிப் பூசுவது
காற்றின் கீறல்களால் காயங்களை உருவாக்கிக் கொள்வதும்
அதன் காரணங்களை
அறிவுஜீவித்தனத்துடன் ஒதுக்கிக் தள்ளுவதும்
துகில் களையும் பதைப்புடன்
எலிகளைத் தேடித் தேடிக் கொலை செய்வது,
பின் அதன் கல்லறைகளில்
முறிந்த சிறகுகளுடன் மலங்க மலங்க விழிப்பதும்
சாத்தியங்களின் சுவர்களில்
தனக்குப் பிடித்த ஆபாசங்களை வரைந்து
சுயமைதுனம் செய்து கொள்வது என்று...
இன்னும் எஞ்சியிருக்கும் வழித்தடத்தில்
ஏன் என்றோ, எங்கு செல்கிறோம் என்றோ தெரியாது,
தன் பாதச்சுவடுகளை அழுந்தப் பதிந்து
இரைக்காக காத்திருக்கிறது,
ஒரு வனமிருகம் போல.
ஏன் கவிஞனாக யாருமே விரும்புவதில்லை
கவிஞனைத்தவிர...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக