வியாழன், 11 ஜனவரி, 2018

அருவி

சூழல் கொள்ளும் தனிமையின்
மஞ்சள் புன்னகை.
பெரிதும் சிறிதுமாய்
இலைத்தூறல்.
வானக்கொப்பில் ஊடாடும்
மேகக்காற்றில்
நகராது திளைக்கும் ஒற்றைக்கனி.
விட்டு விட்டுத்தாவும்
அரைவட்டச் சிறகுகள் உதிர்த்த
இந்திர வளைவு.
ஒவ்வோர் தடாகங்களிலும்
அடைபடா ஒற்றைக் கண் சிமிட்டல்.
முலையுந்தி வான் அழைக்கும்
வெண் காந்தள் விரிவு.
தனித்தவள்
தனிமையைக் குடித்து
தனிமையை நிரப்புகிறாள்.
ஆற்றோரத்து மென்சதுப்பில்
தனிமையைக் கூடும்
வழுவழுத்த
அவள் தேகக் கதுப்பை
உற்றுப்பார்த்து பரிதவிக்கும்
என் தனிமையின்மை,
கரைக்கயிறில் பிணைந்த
பயணமற்ற தோணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக