நகரும் படிகளும்
மின் தூக்கிகளும்
சென்று சேர்க்கும்
இடம்,
நான் பயணித்த பாதையை
அறிவதில்லை.
அதனாலேயே
அவைகளின் பயண வெளியில்
லாரி டயரில் அகப்பட்ட
பாலித்தீன் கிழியை
போல ஆகி விடுகிறது.
ஒவ்வொரு பித்தான்களின்
திறப்பிலும்
வந்து குவிந்து
செல்பவர்களிடம்,
நான் 31 ஓ 24 ஓ
என்று வினவ வினவ
பித்தான்கள்
அடுத்தடுத்த நகர்விற்கு
என்னைக் கொண்டு
சேர்த்து விடுகின்றன.
பித்தான்களற்ற
பயணங்களில்
வழித்துணைக்கோ,
நிழற் தாங்கலுக்கோ
எந்த அவசியமும்
இருந்திருக்காது.
ஆனால் என் நிழல்களை
அங்கு நான் தொலைக்கக்
கூடுமோ?
பித்தான்கள்
அவ்வளவிற்கு மூர்க்கமில்லைதான்.
அதற்கு இலக்கும்
உண்டு அல்லவா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக