புறவாசல் நிழலில்
கொடித்துணி
மகுடி ஊதுகிறது.
என் நிழல்,
ஒளியை மடித்து
உருவமெடுக்கத்
தடுமாறுகிறது.
எதன் ஒளியின்,
எந்த வெப்பத்தின்
ஊடாட்டம் நான்.
பொதிக்குள் பிரட்
அடுக்கியது போல.
ஒளிச்சுனையின்
ஊற்றுக் கண் தேடுகிறேன்.
ஆதி நிழல் எதிரிட்ட
திராவகத்துளியில்
கரைந்து மிஞ்சிய
என் தற்போதைய வடிவு.
கிழக்கும் மேற்கும்
மறுதலித்த புள்ளியில்,
புழுதி தோண்டி
விதையும்
என் சாயையின் அந்தி
ரூபம்.
என் சொப்பனங்களின்
நிலத்தில்
இரவு
ஒரு பெரிய நிழல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக