செவ்வாய், 23 ஜனவரி, 2018

கார்

எரிந்து களைத்த பெட்ரோல் வியர்வையுடன் என் அக்குள் ஈரம்.
இந்த வீடு தன் பராரித்தனத்துடன்  என்னிடம் முகிழ்கிறது.
இருக்கை நுனியில் தளர்ச்சியுற்ற அதன் ஸ்பரிசத்தினால்,
ஒரு மலைப்பாம்பினைப் போல சுருள்கிறது. பெருமூச்சுகள், கதகதப்பிடும் சமிங்ஜை.
பாதைகள் உருவிடும் வளைவுகளில் என்னுடன் சேர்ந்தே,
இந்தப் புது வெளியில், புது நிலத்தில் பதறுகிறது. என்னைப் போலவே சலிப்பின் முணங்குதலில்
மிகப் பெரிதாகவும், நழுக்கியும் குசு விட்டு அமைதியுறுகிறது.
ஆனால் நான் பயன்படுத்தும் பொருண்மை உலகினைத் தவிர்த்து
என்னை அது பயணம் செய்ய அழைக்கும் தூரமும்,
அதன் அனாமதேயத்திலும்
அது என் உயிருள்ள வீடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக