வியாழன், 11 ஜனவரி, 2018

சொந்த வீடு

சிதில வீடு
தன் ஞாபகங்களின் மீட்டலில்
வேர் பிடித்து முளைக்கிறது
ஒரு அரசமாய்.
பால்யத்தின் மிட்டாய்க் கனவுகளில்
மதிற்சுவர்களின்
உடைந்த பெயர்ந்த தேகத்தில்
நினைவுத்திப்பிகளால்
பெயர்களை
வாழ்த்துக்களை
தேடல்களை
குறைகளை            
கிறுக்கிக் கிறுக்கி
உள்ளே செல்ல வழியெழுதி அழைக்கிறது.
அரங்குகளும், மங்களாக்களும்
அடுக்களைகளும், தட்டுப்படிகளும்
குளத்து நீரில் கழுத்து நீட்டி
நோக்கி மறையும் நீர்க்காகமாய்
அதுவரை
இருந்த நிலைத்தன்மையை
கலக்கி முழுகுகிறது.
புறவாசல் முடுக்கில்
நான் கைமைதுனம் செய்ய வரைந்த
அம்மணப்பெண் சித்திரத்தின்
தோல் சுருங்கியிருந்தது.
இந்தச் சிதில வீடு
சிதிலமடைந்து விட்டதல்லவா!
ஆனால் ஒவ்வொரு செங்கல் துணுக்கிலும்
அது சேமித்து வைத்திருக்கும்
காலம் நேற்றைப் போலவோ
நாளை போலவோ இல்லை.
அதன் ரகசியங்கள் காலாவதி ஆவதுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக