ஒரு குமிழ் உடைய
உடைய
அதைச் சூழ்ந்த
நிலம்
திரவப்பரப்பாய்
நெளியத் துவங்குகிறது.
வெண்மணல் புதையக்கணுக்கால்களில்
திரவ மினுக்கம்.
திரவ ஒளி
கண்ணாடித் துகிலலை
வெறிப்பு,
தோணி அலங்கும்
நடுக்கம்.
நெருங்கி நெருங்கிச்
செல்ல
துலக்கம் கொள்ளும்
திடப்பாதையின்
மங்கியத் தோலில்,
சுருள் சுருளாய்
என் முகப்பு ஆடியின்
வைப்பர் மடக்குகள்.
குறுக்கு நெடுக்காய்
உருக்கொள்ளும்
அதே திடப்பாதையின்
உடைந்த துண்டு.
வெயில் திசை மாற்றிய
பாதையில்
கவிழ்ந்து கிடந்து
ஊறுகிறது,
அந்த பெரும் மலையின்
சிறுப்பொதி.
அது திரவமா? திடமா?
தயவு செய்து இடது
பக்கம் திரும்பவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக