சனி, 20 ஜனவரி, 2018

மகா பெரிய புரோட்டா

என்னால் என்ன செய்ய முடியும்
என்பதை திட்டவட்டமாக உணர்ந்திருக்கும் போது எந்த குழப்பமும் இல்லை.
ஆனால்
என்னால் செய்ய முடியாத ஒன்று
எனக்கு கிடைத்தவுடன்,
என் முன் அது மகா பெரிய புரோட்டாவாக உருக்கொள்கிறது.
பிய்க்க பிய்க்க எஞ்சியிருக்கும் அதனை துளியோண்டு சால்னாவால் விழுங்க வேண்டுமாம்.
நான் பிய்த்துக் கொண்டே இருக்கப் போகிறேன்.
இன்னும் ஒரு கிண்ணம் சால்னா கிடைக்கும் வரை.
செய்ய முடியாத ஒன்று மிகப்பெரியதாய் இருப்பது எவ்வளவு ஆசுவாசம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக