வியாழன், 11 ஜனவரி, 2018

புகை

இழுத்துக் கொண்டிருந்தாள்
இப்பொழுது
நாசித்துவாரங்களிலும், தொண்டைக் குழியிலும்
அதக்கியிருந்த புகை,
அரவு நீள் சடையாய் நெளிந்து
என்னைக் கமழ்கிறது.
கூர்க்கத்தியால்
என் குறித் தொலியை சுரண்டுகிறது.
அடிவயிற்றில் வீக்கமெடுத்த
சிறு நீர்ப்பையாய் அலங்குகிறது.
இன்னும் அவள்
புகை இழுத்துக் கொண்டிருந்தாள்.
அணைக்க ஒவ்வாத கங்கை
ஊசி நுனியால்
என் ஆசன வாய்க்குள் சொருவுவது போல.
நான்
லைட்டர் கேட்க துணியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக